ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

199 0
ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவினரால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 07 மணியளவில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த வீதி பிரதேசத்தில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

05 கிராமும் 520 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குறித்த பெண் கொம்பனித் தெரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

27 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

பொம்பனித் தெரு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.