மொனராகலை வனப் பகுதியில் தீ

306 0
மொனராகலை பொலிஸ் பிரிவில் ஏக்கர் 08, அலியாவத்தை சரணாலயத்தில் தீடிரே தீ ஏறபட்டுள்ளது.

மொனராகலை பொலிஸாருக்கு குடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்டு பிரதேசவாசிகின் ஒத்துழைப்புடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப் பிரதேசத்தில் தீ வைத்த குற்றச்சாட்டுக்காக பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.