எதிர்வரும் பொதுத்தேர்தலே எனது இறுதி தேர்தல் – மங்கள

237 0

எதிர்வரும் பொது தேர்தலுடன் தேர்தல்களின் பங்கப்பற்றுவதிலிருந்து விடைப்பெற தீர்மானித்துள்ளதாகவும் இறுதி ஐந்து வருடங்கள் மக்களை முன்னேற்றுவதற்கான பணிகளை செய்ப்போவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.

அத்துடன் பிடிப்பட்ட பொருளாதாரத்திலிருந்து வெளிவர வேண்டும். சந்தரப்பவாத கல்வியில் முடங்காமல்  சர்வதேசத்துக்கு ஏற்ற கல்வியில் முன்னேற வேண்டும். திறமையானவர்களுக்கு முதலிடம் வழங்க வேண்டும்.  அரசியலினூடாக மக்கள் வாழ்க்கையை அழகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது முப்பது வருடகால அரசியல் வாழ்க்கையை நினைவுக்கூறும் வகையில் நேற்று மாத்தறை பிரதேசத்தில் ஏற்பாடு செயப்பட்டிருந்த நிகழ்வில்  உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னபாக நாங்கள் முகங்கொடுத்த சவால்களையே இன்றும் எதிர்க்கொண்டுள்ளோம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் வெவ்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

அந்த நிலையே இன்றும் காணப்படுகிறது. இந்த முப்பது வருட காலப்பகுதியிலும் இந்த கோரிக்கைகள் மீண்டும் மீண்டும்  புத்துயிர் பெறுகின்றத என்றால்  நாட்டின் பயணம் தொடர்பில்  கவலையளிக்கிறது.

1989 ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டக் கொள்கைகள் இன்னும் மாற்றமடைய வில்லை என்றால்  அதனூடாக நாங்கள் நாடு என்ற ரீதியில் முன்னேறவில்லை என்பதே தெளிவாகிறது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.