கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

325 0

கிளிநொச்சியில் பாவனையற்று காணப்பட்ட  கிணறொன்றிலிருந்து சில வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வெடிபொருட்களைப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் உள்ள கிணறு சுத்தம் செய்யப்பட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கையினை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.