லசந்த கொலை–மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சடலம்

317 0

downloadஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொன்றது தானே என, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எதிரிசிங்க ஜெயமான்னவின் சடலத்தை மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தீனால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, கேகாலை நீதவான் கிஹான் மீகஹகேவின் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி உயிரிழந்த ஜெயமான்னவின் சடலம் கேகாலை – புவத்தெனிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க ஜெயமான்ன கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றதோடு, லசந்த கொலை செய்யப்பட்டது 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஆகும்.

மேலும், 12 வருடங்கள் மட்டுமே சேவையில் இருந்த அவருக்கு சேவைக் காலத்தை பூர்த்தி செய்யாததால், ஓய்வூதியம் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.