ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்- தேசிய பிக்குகள் முன்னணி

313 0

gnanasara-chirathu-01-2xm9lxq4nu0g63wuyaql8qதேசிய வளங்களை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சியின் திட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய பிக்குகள் முன்னணி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைப்பின் பொதுச் செயலாளர் வகமுல்லே உதித தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதி செயற்பட்டது போன்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் செய்துகொள்ளவுள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் செயற்பட வேண்டும்.

எட்கா ஒப்பந்தம் நாட்டின் தேசிய வளங்களை இந்தியாவுக்கு விற்கும் ஒரு திட்டமாகும். ஆகவே ஜனாதிபதி உடனடியாக தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்தார்.