வெளிநாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது

299 0

கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கிரேண்ட்பாஸ்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜோர்ச் பொரேரா மாவத்தையிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொகரெல்ல – இப்பாகமுவ பகுதியைச் சேரந்த 21-42 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.