கண்டி – கலஹா பாதுகாப்பு வனப்பகுதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுகாப்பு வனப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் , பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனை நடவடிக்கைகளிலே 4 – ஜெலனைட் குச்சிகள் , 1 கிலோ கிராம் அமோனியா , சாதாரண வெடித்தலுக்கு பயன்படுத்தும் 14 மீட்டர் நீளமான வெடிமருந்து நூல் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாராவது இப்பகுதியில் இந்த வெடிப்பொருட்களை கைவிட்டு சென்றிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

