பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்பது முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் பொதுசட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


கேகலை நகரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்ற முஸ்லிம் மத சட்டங்கள் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். 72 கன்னிகள் தேவையென்று ஒரு அடிப்படைவாதி கருதினால் நாம் அனைவரும் இறக்க நேரிடும். அடிப்படைவாதம் நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படும்.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு பொது சட்டத்திற்கு அப்பாட் சென்று எவரும் செயற்பட முடியாது. பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்பது முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் பொதுசட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுவார்கள்.
முஸ்லிம் மதத்தில் இளவயது திருமணம் பிள்ளைகளின் எதிர்காலத்தை இல்லாதொழித்துள்ளது. முரண்பாடுகள் ஏற்பட்டால் விவாகரத்து பெற்றுக் கொள்வதும் ஆண்களுக்கு இலகுவாக காணப்படுகின்றது.இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றார்கள். பொதுசட்டத்தில் விவாகரத்து பெறுவது இலகுவான காரியமல்ல. அனைத்து இனங்களும் பொது சட்டத்தை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும்.
நல்லாட்சி என்ற பெயரில் வாக்குறுதிகளை மாத்திரம் அரச கொள்கையாக கொண்டு ஆட்சியமைத்த அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது. இன்னும் குறுகிய காலத்திற்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்களே தகுந்த பதிலடியினை வழங்குவார்கள் என்றார்.

