வவுனியா செட்டிகுளம் கங்கங்குளம் கிராமத்தில் வெ ள்ளி இரவு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர. அந்தோணியம்மா என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக மனைவி தனியாக வீடொன்றில் வசித்து வந்ததாகத் தெரிய வருகின்றது.
இந்நிலையில், கணவனால் வெங்காய வெடி என தெரிவிக்கப்படும் உள்ளூரில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வெடியினை பயன்படுத்தியே மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதுதொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.

