ஐ.தே.க. வின் தேர்தல் பிரசாரம் ஜூலை முதல்!

331 0

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்  ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்த கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பிரசார நடவடிக்கைகளுக்கென நால்வர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அத்தோடு இந்த வாரத்துக்குள் ஐக்கிய தேசிய முன்னணிக்கான புதிய அமைப்பாளர்களை தெரிவுசெய்யப்படவுள்ளதோடு, சகல அமைப்பாளர்களையும் சந்தித்து விசேட கலந்துரையாடல்களை  முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.