ஜனா­தி­பதி குறித்து நாட்டு மக்கள் மத்­தியில் நல்ல அபிப்­பி­ராயம் இல்லை-லால்­காந்த 

316 0

ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் கரு ஜய­சூ­ரிய, சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரின் பெயர்கள் உள்­ளன. ஜனா­தி­பதி கனவில் உள்ள இவர்கள், கொழும்பு துறை­மு­கத்தின் கிழக்கு முனை­யத்தை  விற்கும் அர­சாங்­கத்தின் முயற்­சி­களில்  தமது நிலைப்­பாடு என்ன என்­பதை தெரி­விக்க வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சம்­பந்­தனும், ஹக்கீம் உள்­ளிட்ட முஸ்லிம் தலை­மை­களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரியும், எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்­தவும் தத்­த­மது நிலைப்­பா­டு­களை உடன் அறி­வி­யுங்கள் எனவும் அக்­கட்சி கோரிக்கை விடுத்­துள்­ளது.

மக்கள்  விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று  கட்­சியின்  தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் அக்­கட்­சியின்  உறுப்­பினர் லால்­காந்த  அதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே இவற்றை குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

கொழும்பு கிழக்கு துரை­ய­டியை விற்கும் முயற்­சியை  அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை விற்ற போது கொழும்பு துறை­மு­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்று அர­சாங்கம் கூறி­யது. ஆனால் தற்­போது கொழும்பு துரை­ய­டி­யையும் விற்கும் நட­வ­டிக்­கையை  எடுத்து வரு­கின்­றது. இதில் ஏற்­க­னவே ஒரு பகுதி சீனா­வுக்கு விற்­கப்­பட்டு விட்­டது. இப்­போது ஏனைய பகு­தியை இந்­தியா -சீனா இணைந்த  நிறு­வனம் ஒன்­றுக்கு விற்கும் நட­வ­டிக்­கையே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த முயற்­சியை தோற்­க­டிக்க வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் எமது தலை­மைகள் கேள்வி எழுப்பி வரு­கின்­றன. எனினும் துறை­மு­கத்தில் எமது போராட்டம் முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை உள்­ளது. எமது தொழிற்­சங்கம் மாத்­திரம் இல்­லாது துறை­முக ஊழி­யர்கள் அனை­வரும் இணைந்து எமது வளத்தை காப்­பாற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைக்­கின்றோம்.

அது­மட்டும் அல்ல இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு என்ன என்­பதை அவர் கூற வேண்டும். இன்று ஜனா­தி­பதி குறித்து நாட்டு மக்கள் மத்­தியில் நல்ல அபிப்­பி­ராயம் இல்லை. ஆனாலும் அவர் இன்றும் ஜனா­தி­பதி என்­பதால் அவ­ருக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து செயற்­பட வேண்டும். அதே­போன்று   துறை­மு­கத்தை விற்கும் நட­வ­டிக்­கைக்கு ஜனா­தி­பதி என்ன கூறு­கின்றார் என்ற நிலைப்­பாட்டை முன்­வைக்க வேண்டும்.

பிர­தமர் குறித்து பேசி அர்த்தம் இல்லை. அவர் தான் இந்த விற்­ப­னையின் தலைவர். ஆகவே அவர்­க­ளிடம் இது குறித்து கேட்­பதில் அர்த்தம் இல்லை. அதே­போன்று   மஹிந்த ராஜபக் ஷவும்  இது குறித்து தனது நிலைப்­பாட்­டினை கூற வேண்டும். இன்று நாட்டில் குண்டு வெடித்தால் இனக் கல­வரம் வந்தால் முதலில் வரு­பர்­வர்கள். நல்ல விடயம்.  அதனை நாம் வர­வேற்­கின்றோம். அதேபோல் நாட்­டினை விற்கும் நட­வ­டிக்­கையில் அவர்­களின் நிலைப்­பாடு என்ன என்­ப­தையும் கூற வேண்டும்.

சம்­பந்­தனின் நிலைப்­பாட்­டையும் கூற வேண்டும். விடிந்­ததில் இருந்து இரவு  வரை தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை அவர் பேசு­கின்­றனர் என்று தெரியும். ஆனால் தேசிய பிரச்­சினை ஒன்றில் அவர் வாய் திறந்­ததை நாம் கண்­ட­தில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை  பேசு­கின்­றாரே தவிர நாட்டின்  முக்­கிய வளங்­களை விற்கும் முயற்­சி­களை தடுக்க அவர்கள் எந்த கருத்­துக்­க­ளையும் கூறி­ய­தில்லை. எனவே அவரும் இந்த விட­யத்தில் தனது நிலைப்­பாட்டை தெரி­வி்க்க வேண்டும். சம்­பந்­தனும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் இலங்­கையின் இன­மாக தம்மை நினைத்தால் நாடு குறித்து அக்­கறை இருந்தால், தமி­ழர்­களும் இலங்­கையர் என்ற எண்ணம் கொண்­டி­ருந்தால்  இந்த விட­யங்­களில் அவர்­களின் உறு­தி­யான நிலைப்­பாடு என்ன என்­பதை தெரி­விக்க வேண்டும். சுமந்­திரன்  மூல­மா­க­வேனும் இதனை தெரி­விக்க வேண்டும்.

அத்­துடன் ரவூப் ஹகீம் உள்­ளிட்ட முஸ்லிம் தலை­மைகள் தமது நிலைப்­பாடு என்ன என்­பதை தெரி­விக்க வேண்டும். இவர்­களும் இஸ்லாம் உரி­மைகள் முஸ்லிம் மக்­களின் சுதந்­திரம் என்று கூறி­வ­ரு­கின்­றனர்.  தவிர தேசிய கருத்­துக்­களை இவர்கள் முன்­வைத்­த­தாக தெரி­ய­வில்லை. அத்­துடன் மலை­யக தலை­வர்கள் அவர்­களின் நிலைப்­பாட்­டையும் கூற­வேண்டும். அது­மட்டும் அல்ல இன்று சில­ரது பெயர்கள் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்ற பட்­டி­யலில் உள்­ளன. இதில்  ஒருவர் கரு ஜெய­சூ­ரிய, இன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் ஒரு பகு­தி­யினர் இவரை தெரிவு செய்­துள்­ள­தாக தெரி­கின்­றது. அதே­போன்று  சஜித் பிரே­ம­தாச இருக்­கின்றார். இவரும் பட்­டி­யலில் உள்ளார். ஆகவே இவர்கள் தமது தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின்  செயற்­பாட்­டிற்கு உங்­களின் நிலைப்­பாடு என்ன என்­பதை தெரி­விக்க வேண்டும்.

அதே­போன்று  கோத்­த­பாய  ராஜபக் ஷ அவ­ரது நிலைப்­பாட்டை கூற வேண்டும். இன்று அவ­ருக்கு எதி­ராக சிறப்பு நீதி­மன்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லையில் அவர் சிங்­கப்­பூரில் உள்­ள­தா­கவும் அவ­ருக்கு சுக­வீனம் என்ற கருத்­துக்­களும் உள்­ளன.   இதன் உண்மை தன்மை என்­ன­வென்று தெரி­ய­வில்லை. ஆனால் இவரும் தனது நிலைப்­பாட்டை கூற வேண்டும்.  ஜனா­தி­பதி பட்­டி­யலில் உள்ள இன்­னொ­ரு­வ­ரான பசில் ராஜபக் ஷவும் இது குறித்து அவ­ரது நிலைப்­பாட்டை கூற வேண்டும். இறு­தி­யாக சம்­பிக்க ரண­வக்­கவும்  ஜனா­தி­பதி வேட்­பாளர் கனவில் இர­க­சி­ய­மாக சில வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றார். ஆகவே இவர்கள் முதலில் நாட்­டினை விற்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் முயற்­சியில் தத்­த­மது நிலைப்­பாட்டை கூற வேண்டும். துறை­மு­கத்தை விற்­பது என்­பது நாட்­டினை விற்­ப­தற்கு சம­மாகும். ஆகவே இன்று தேசிய வாதம் பேசும் இவர்கள் அனை­வரும் முதலில் தமது நிலை­பாட்டை கூற வேண்டும்.

துறை­மு­கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்கு உள்ளது. ஆனால் தனித்து எம்மால் போராட முடியாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது நாம் தனியாக போராட்டம் நடத்தினோம். ஆனால் அதில் எம்மால் வெற்றிபெற முடியவில்லை. அதிகமாக போராடி தோற்றுப்போனது நாம்தான். இப்போது கொழும்பு துறைமுகத்தை விற்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. இதனையாவது நாம் அனைவரும் இணைந்து தடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.