பேச்­சு­வார்த்தை நடத்தி கூட்­டணி அமைப்­ப­தற்கு பொது­ஜன பெர­முன தயா­ரா­கவே இருக்­கின்­றது-ரம்­புக்­வெல

188 0

எவ்­வா­றான கூட்­ட­ணிகள் அமைந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் இரண்டு விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்பை செய்­ய­மாட்டோம்.

பொது­ஜன பெர­முன கட்­சியின் சின்னம் மற்றும்  எமது ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆகிய இரண்டு விட­யங்­களில் ஒரு­போதும்  விட்­டுக்­கொ­டுப்­புக்கு  இட­மில்லை என்று  கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய  தெரி­வித்தார்.

எந்­த­வொரு தரப்­பு­டனும்  பேச்­சு­வார்த்தை நடத்தி கூட்­டணி அமைப்­ப­தற்கு பொது­ஜன பெர­முன தயா­ரா­கவே இருக்­கின்­றது. ஆனால் எமது நிபந்­த­னை­களில் கீழி­றங்கி வர­மாட்டோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எந்­த­வொரு முன்­ன­ணி­யையும் அமைப்­ப­தற்கு  பொது­ஜன பெரமுன தயா­ரா­கவே இருக்­கின்­றது. எம்­முடன் யாரும் இணைந்­து­கொள்­ளலாம். அதற்­கான கத­வுகள் திறந்தே காணப்­ப­டு­கின்­றன.

தற்­போது  சுதந்­திரக் கட்­சியும்  பொது­ஜன பெர­மு­னவும் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­காக  பேச்சு நடத்­து­கின்­றன.   இது­வரை பல சுற்றுப் பேச்­சுக்கள் நடை­பெற்­றுள்­ளன.

ஆனால் இன்னும் முக்­கி­ய­மான விடயம் குறித்து பேசப்­ப­ட­வில்லை.   பொது­வான விட­யங்கள் குறித்து மட்­டுமே  இது­வரை பேசப்­பட்­டுள்­ளன.  இதன் பின்­னரே   முக்­கிய விட­யங்கள் குறித்து பேசப்­ப­ட­வுள்­ளன.

ஆனால் ஒரு விட­யத்தில் நாங்கள் மிகவும் கவ­ன­மாக  இருக்­கின்றோம். அதா­வது எவ்­வா­றான கூட்­ட­ணிகள் அமைந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் இரண்டு விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்பை செய்­ய­மாட்டோம்.

பொது­ஜன பெர­முன கட்­சியின் சின்னம் மற்றும்  எமது ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆகிய இரண்டு விட­யங்­களில் ஒரு­போதும் விட்­டுக்­கொ­டுப்­புக்கு  இட­மில்லை.

இதனை ஏற்­றுக்­கொண்டு அனை­வரும்  எம்­முடன் கூட்டுச் சேர்­வ­தற்­காக   பேச்­சு­வார்த்தை நடத்­தலாம். சுதந்­திரக் கட்­சி­யுடன் நாம்  இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான சாத்­தியம் அதிகம் இருக்­கின்­றது.

காரணம்  இரண்டு தரப்­பி­னரும் பல முக்­கிய விட­யங்­களில் ஒன்­று­பட்ட கருத்தைக் கொண்­டுள்­ளனர். ஆனாலும் சுதந்­திரக் கட்சி மட்­டு­மல்ல எந்தக் கட்­சி­யாக  இருந்­தாலும்   எமது  நிபந்தனைகளை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம். அதனை புரிந்துகொண்டு எம்முடன் யாரும்  பேச்சு நடத்தலாம். யாருடனும் கூட்டணி அமைக்க தயாராகவே  இருக்கின்றோம். எமது கட்சியின் கதவுகள் அதற்காக  எப்போதும் திறந்திருக்கும்.

சுதந்­திரக் கட்­சியும்  பொது­ஜன பெர­மு­னவும் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­காக  இன்­றைய தினம்  ஐந்தாம் கட்ட பேச்­சு­வார்த்­தையை நடத்­த­வுள்ள நிலையில் அது சாத்­தி­யமா என வின­வி­ய­போதே ரம்புக்வெல்ல இதனை கூறினார்.