இரும்பு மோசடியில் ஈடுபட்டவர் கைது

50 0

சியம்பலான்டுவ பகுதியில் 13 இலட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான இரும்புத் தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் வீதி அபிவிருத்தி பொறியியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சியம்பலான்டுவ – ஹெட ஓய பாலத்தின் கட்டுமான பணியின் போது நீக்கப்பட்ட இரும்புகளை மோஷடியாக விற்பனை செய்துள்ளதாக அவருக்கு எதிராக வீதி அபிவிருத்தி சபையினால் சியம்பலான்டுவை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை சியம்பலான்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.