ஹெரோயினுடன் மூவர் கைது

66 0

கொட்டாஞ்சேனை, பேலியாகொட மற்றும் கஹடகஸ்திகிலிய பகுதிகளில் குற்றத்தடுப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 21 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினும், பேலியாகொடயில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினும், கஹடகஸ்திகிலியவில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் 2 கிராம் 130 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொழும்பு மற்றும் மஹபொதான பகுதிகளைச் சேர்ந்த 22 – 55 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.