வெளி­நா­டு­களில் வாழும் இலங்­கை­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கும் க.பொ.த சாதா­ரண தர மற்றும் உயர்­தர பரீட்­சை­க­ளுக்கு தோற்­று­வ­தற்கு தூத­ர­க­ங்­களின் ஊடாக வழி­களை செய்யும் செயல்­மு­றை­யொன்றை முன்­னெ­டுக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக கல்வி அமை ச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

பரீட்­சைகள்  திணைக்­க­ளத்தின் நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்வ இணை­ய­த் ­தளம் மற்றும் க.பொ.த.சாதா­ரண தரம் மற்றும் உயர்­தர பரீட்சை சான்­றி­தழ்­களை இணை­யத்­த­ளத்­தின்­ ஊ­டாக வழங்­கு­வ­தனை அங்­கு­ரார்ப்­பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கையில்,

பரீட்­சைகள் திணைக்­களம் நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மான நிறு­வ­ன­மாக இயங்க வேண்டும். அதற்­காக பல்­வேறு செயல்­மு­றை­களை கடைப்­பி­டிக்க வேண்டும். அத்­துடன் பல்­வேறு பிரத்­தி­யேக தலை­யீ­டு­ களை முடிந்­த­ளவில் குறைத்­துக்­கொள்ள வேண்டும். நான் கல்வி அமைச்­ச­ராக பொறுப்­பேற்று நான்கு வரு­டங்­களில் பல்­ வேறு புரட்­சி­க­ர­மான மாற்­றங்­களை கல்வித் துறையில் முன்­னெ­டுத்­துள்ளேன். அச்­ச­மின்றி தீர்­மா­னங்கள் பல எடுத்த போது பல்­வேறு தரப்­பி­ன­ரிடம் இருந்து இடை­யூ­று­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் சந்­தித் தேன். டெப் கணனி வழங்கும் திட்டம் மாத்­தி­ரமே முன்­னெ­டுக்க முடி­யாமல் போனது. எனினும் எப்­ப­டி­யா­வது மாண­வர்­க­ளுக்கு டெப் கணனி வழங்கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துவேன்.

கல்­வியை அடிப்­ப­டை­யாக கொண்டே எதிர்­காலம் அமையப் போகின்­றது. இந்­நி­லையில் புதிய பிரவேசங்களை இனங்கண்டு எல்லைகளை கடந்து செயற்பட்டால் எம்மால் பல மாற்றங்களை செய்ய முடியும். இதன்படி பரீட்சை சான்றிதழ்களை இணையத்தத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்டமாகும் என்றார்.