தூங்கிக் கொண்டிருந்த கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவி

257 0

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 01 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கணவன் மதுபோதையில் இருந்த வேலையில் அதிகாலை 01 மணி அளவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை இரும்பால் தலைபகுதியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பின்னர் கொலை செய்த பின் குறித்த பெண் வட்டவலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

44 வயதுடைய ஆறுமுகன் ஜெயராமன் எனும் நபரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, சம்பவம் தொடர்பில் மரண விசாரனைகளுக்காக ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு விசாரணைகளை மேற்கொண்டதன் பின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யபட்ட மனைவி இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.