மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது 4 பேர் தப்பி ஓடிய நிலையில், 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு 7 இலச்சத்து 52 ஆயிரத்து 270 ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது தப்பி ஓடிய ஒருவரின் கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, கல்முனை, கல்லாறு, சாய்ந்தமருது, ஆரையம்பதி, புதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி.தீர்கா வத்துர தெரிவித்தார்.

