கண்டி – திலக் ரத்னாயக்க வீதியில் கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.
காடுபள்ளி வீதி, கண்டி பகுதியை சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

