வீரகுல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதலான பகுதியில் புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நிட்டம்புவ – மாதலான பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப் பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேகநபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

