கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

300 0

தணமல்வில பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தணமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுல்லார பகுதியில்  நேற்று புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இளைஞன் கைது செய்யபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கிவுல்லார – மெதகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டது.

பொலிஸார் சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.