பொலிஸார் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டவர் சுட்டுக்கொலை !

297 0

அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஊருமுத்த பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஊருமுத்த பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றினை பொலிஸார் சுற்றிவளைத்தபோது மேற்படி நபர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று காலை கைதுசெய்ய முயற்சித்தபோது பொலிஸார் மீது குறித்த நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, பொலிஸர் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.