அனுமதிப்பத்திரமற்ற இரசாயணப் பதார்த்தங்களுடன் ஒருவர் கைது

298 0

மதுகம, மீகஹதென்ன பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமற்ற பாதுகாப்பற்ற களஞ்சியசாலையில் இருந்து ஒருதொகை இரசாயணப் பதார்த்தங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் தலைமையக முகாமின் விஷேட சுற்றிவளைப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான 300 கிலோ கிராம் நிறையுடைய இரசாயணப் பதார்த்தம் அடங்கிய 08 பெரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக மீகஹதென்ன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.