தேசிய பாதுகாப்பு விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம்- நிமல்

527 0

தேசிய பாதுகாப்புடன் தொடர்பான விடயங்களை பகிரங்கப்படுத்துவது தவறான நடவடிக்கையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட சிலரே அறிந்திருக்க வேண்டும் எனவும் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறும் விசாரணைகளை ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவதை உடன் நிறுத்துமாறு சபாநாயகரைக் கேட்டுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.