துப்பாக்கியுடன் ஒருவர் கைது

314 0

பகமூன – தியபெதும 5 ஆம் கட்டை வனப் பிரதேசத்தில் பகமூன பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்குப் பயன்படுத்தும் 2 ரவைகள் என்பவற்றுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (30) பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய கிரிதலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் இன்று (31) ஹிங்குரக்கொட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.