ரிஷாத்தை தண்டித்து அரசாங்கத்தை பாதுகாக்க ஜே.வி.பி தயாரில்லை- ரில்வின்

214 0

 ரிஷாத் பதியுதீனுக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுத்துவிட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, குண்டுத் தாக்குதல்களில் பலியான நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு பொறுப்பு கூற வேண்டியது ரிஷாத் மாத்திரமல்ல. முழு அரசாங்கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும் தாக்குதலை மேற்கொண்ட முதலாவது சந்தேகநபர் அதாவது தற்கொலை குண்டுதாரி இறந்துவிட்டார்.

இரண்டாவது சந்தேகநபர் இந்த அரசாங்கமாகும். எனவே அரசாங்கத்திற்கு தான் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொள்ளாது. எனவே புதிய அரசாங்கம் ஒன்று வெகுவிரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வெலிமட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.