ரிஷாத் பதவி விலகத் தயாராகவுள்ளார் – தயா கமகே

298 0

எதிர்க்கட்சியின் தேவைக்கேற்ப அவர்களால் இலக்கு வைக்கப்படுகின்றவர்கள் மீது நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வந்து அவர்களை பதவி நீக்க ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. காரணம் அமைச்சர் ரிஷாத் தான் எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலகுவதற்கு தயாராகவே இருக்கின்றார் என்று ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் அவர் தானாக சுயாதீனமாக முடிவெடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தான் எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலகுவதற்கு தயாராக இருப்பதாக அவர் எம்மை சந்தித்த போது தெரிவித்தார்.

எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணையை கொண்டு வர வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அவர் தானாக பதவி விலக தயாராகவுள்ளார். அதே வேளை எதிர்கட்சிக்கு வேண்டியதைப் போன்று ஒவ்வொருவரையும் இலக்கு வைத்து நம்பிக்கையில்லா பிரேரணைகளைக் கொண்டு வந்து அவர்களை பதவிநீக்குவதற்கு இடமளிக்க முடியாது.