அயோத்தியில் ராமாயணம் அருங்காட்சியகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் தேர்வு

248 0

201610161113425343_government-identifies-25-acre-plot-for-ramayana-museum-in_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமாயண காவியத்தை ஓவியங்களால் பிரதிபலிக்கும் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு அதற்கான பெரிய பரப்பளவு கொண்ட நிலத்தை தேர்வு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், அயோத்தில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 25 ஏக்கர் காலிநிலம் இந்த திட்டத்துக்காக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

வரும் 18-ம் தேதி அயோத்தி நகருக்கு வருகைதரும் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா இந்த இடத்தை பார்வையிட்டு இறுதிப்படுத்தியதும், அருங்காட்சியகத்துக்கான அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 நாடுகளை சேர்ந்த இந்துமத தலைவர்கள் கலந்துகொள்ளும் ராமாயண கருத்தரங்கம் நடத்துவது தொடர்பாகவும், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகத்தை அமைப்பது தொடர்பாகவும்  இந்து மதத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா ஆலோசனை நடத்தவுள்ளார்.