ஏவுகணை அமைப்பில் இந்தியா இணைந்தது.

517 0

india_2911772fஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா 35வது உறுப்பினராக நேற்று உத்தியோக பூர்வமாக இணைந்துக் கொண்டது.
இதன் மூலம் உயர் தொழில்நுட்பங்களைப் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளதாக தெ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள், குறிப்பாக குறைந்தது 500 கிலோ கிரம் எடையுடன் 300 கி.மீ. பறந்து சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 35- வது உறுப்பு நாடாக இந்த அமைப்பில் சேர இந்தியா ஏற்கெனவே விண்ணப் பித்திருந்தது. உரிய நடைமுறை களுக்குப்பின்னர் நேற்று முறைப்படி இணைந்தது.

Leave a comment