அரசுக்கு எதிரான பதாகைகளை கண்டதும் மக்கள் போராட்டத்தில் இருந்து ஓடி மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

5014 0

M

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பி பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் போராட்டத்தின் ஆரம்பத்தில் தேங்காய் உடைத்து விட்டு அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டனர்.
தாங்களும் மக்களுக்காக போராடுகின்றோம் என்ற தோற்ப் பொலிவினை வெளியுலகத்திற்கு காட்டுவதற்காகவே அவர்கள் அவ்விடத்திற்க வந்தார்களே தவிர மக்கள் அக்கறை கொண்டு அவர்கள் அங்கு வரவில்லை.
இவ்வாறு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் கடற்றொழில் இணையத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்பாடி விடுதியில் இன்றுமாலை ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய குறித்த அமைப்பினர்களினாலேயே மேற்படி குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இப் போராட்டமானது யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் ஆலைய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இப் போராட்டத்தின் ஆரம்பத்தில் அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் ஆலையத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்கள்.
இவ்வார்ப்பாட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பல கோசங்கள் எழுப்பப்பட்டும், அரசுக்கு எதிரான எழுப்பட்ட பதாகைகளும் அங்கு காணப்பட்டதாலேயே அவர்கள் அவ்விடத்தினை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களை விடவும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதே முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனாலேயே குறித்த ஆரம்ப்பாட்டத்தில் இருந்து சொல்லாமல் மறைந்திருந்தார்கள் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment