அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்தார்

4734 16

sisர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன. பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்பும் கனிவும் நிறைந்த மரியா,நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை தொண்டாற்றி வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து போனார். அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இறக்கும் தருவாயில் சிஸ்டர் மரியா கூறியவாறே உயிரிழந்தார்.  முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் புகைப்படங்கள்தான்  இவை.

Leave a comment