சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர் கைது

389 0

பொலன்னறுவை, நிஷ்ஷங்கமல்லபுர பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

35 வயதுடைய பங்களாதேஷ் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.