தசாப்தம் கடந்த எம் தமிழினப் படுகொலை! (இன்றைய முழுமையான காணொளி)

233 0

பெற்றோரை, எம் உற்றோரை
காட்டுச் சிங்கங்கள் ஒன்றுகூடி
கடித்துக்குதறி
இன்றுடன் பத்தாண்டு!!

அப்பாவை, அம்மாவை,
அக்காவை, அண்ணாவை
அந்நியன் கொன்று, தின்று,
உதிரம் பருகி
தசாப்பதம் தாண்டுது!

கிழக்கு வெளிக்கும் என்று
பொழுதைத் தொலைத்து விட்டோம்!
நிசி மட்டும் நீங்கவில்லை!!

ஒறுப்புப் போராட்டம்
ஓராயிரம் நடாத்தி விட்டோம்!
ஒன்றும் கிடைக்கவில்லை!

அகிம்சை வழியிலும்
அறப்போர் நடாத்தியும்
துறந்து எம் உயிரை
துளியும் பலனில்லை!

இன்னும் தீர்வில்லை!
இதுவரை விடிவில்லை!!
இன்றும் அழுகின்றோம்
முள்ளிவாய்க்கால் முற்றத்தில்!

நிலையவள்………