சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் தனி திபெத் இயக்கத்தினர் போராட்டம்

267 0

201610151108569646_group-of-tibetan-protestors-detained-for-attempting-to-hold_secvpfதிபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக தனி திபெத் விடுதலை இயக்கத்தினர் பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாட்டு வரும் இன்றும் நாளையும் (16-ம் தேதி) கோவா தலைநகரான பனாஜியில் நடைபெறவுள்ளது.

இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பிரேசில், ரஷியா தென்னாப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் க்சி ஜின்பிங் இன்று வருகை தரவுள்ள நிலையில்
திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக தனி திபெத் விடுதலை இயக்கத்தினர் சீன அதிபர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் திபெத் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தினரும் திரளாக பங்கேற்றனர்.

திபெத் பகுதியை நீதியற்ற முறையில் ஆக்கிரமித்துள்ள சீனா அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும், எங்களது எதிர்ப்புக்குரல் உலக நாடுகளின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று திபெத் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர் டென்சிங் ஜிம்மி கூறினார்.

பின்னர், போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.