ஜனாதிபதியுடன் இன்று தி.மு.க எம்.பிக்கள் சந்திப்பு: கனிமொழி பேட்டி

283 0

201610151200185717_kanimozhi-says-dmk-mps-meet-president-pranab-today_secvpfகருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கிறோம் என்று கனிமொழி பேட்டியளித்தார்.

தி.மு.க எம்.பி கனிமொழி இன்று காலை டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை தி.மு.க எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுக்க இருக்கிறோம்.

தண்ணீர் இன்றி ஏற்கனவே 11 லட்சம் விவசாய நிலங்கள் பாழாகி விட்டது. சம்பா குருவை வீணாகி விட்டது. விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றமும், நடுவர் ஆணையமும் இடைக்கால நிவாரணமாக தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தும், கர்நாடகம் அதை வழங்கவில்லை.

கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நடந்து கொள்கிறது. அந்த அரசின் நிலைப்பாடு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர் மறையாகவே உள்ளது.சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய இடைக்கால நிவாரணமான தண்ணீரையாவது காவிரியில் திறந்து விட குடியரசு தலைவரை சந்திக்கும் போது வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.