இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்கள் மீட்பு

416 0

891256இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை கஞ்சா போதைப் பொருட்கள் தமிழ் நாட்டின் மண்டபம் கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளன.

சிற்றூர்ந்து ஒன்றில் கடத்தப்பட்டு, படகு ஒன்றின் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பெறுமதி 10 லட்சம் இந்திய ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடத்தியவர் காவற்துறையிடம் இருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.