திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது

289 0

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கில் இருந்து பிரதிவாதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி உத்தரவிட்டுள்ளார். 

குறித்த மனு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் மன்னிப்பு கேட்பதாக நீதிமன்றில் தெரிவித்தார். 

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.