ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்

334 0

 

maithripalasirisena380fbஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு நாளை மறுதினம் செல்லவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்குச் செல்லும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கை – இந்திய இருதரப்பு ஒத்துழைப்புக்கள் மற்றும் புதிய முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இருதரப்பு சந்திப்புக்களின்போது கலந்துரையாடப்படவுள்ளன.

இதேவேளை பிரேஸில், சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் உச்சிமாநாடு நாளை மறுதினம் தொடக்கம் 16ஆம் திகதிவரை இந்தியாவில உள்ள கோவா நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெறாத பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், ஸ்ரீலங்கா, மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேகேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.