திருமலையிலுள்ள இந்து ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுங்கள்-இந்துக் குருமார் சங்கம்

361 0

 

templeதிருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மூதூர் இந்து குருமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்து குருமார் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பூர் பகுதியில் யுத்தம் நிறைவடைந்து கட்டம் கட்டமாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், அப்பகுதியிலுள்ள ஸ்ரீமுருகன் ஆலயம் இதுவரை மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக கடற்படையினரின் வசம் காணப்படுகின்றது.

இதேவேளை வெருகல் பிரதேசத்திற்குட்பட்ட கல்லடி நீலி அம்மன் ஆலயம் மலையில் காணப்பட்டதாகவும், குறித்த கோவில் உடைக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பௌத்த பிக்கு படைத்தரப்பின் உதவியோடு ஆலயத்திற்குரிய காணியையும், மக்களின் காணிகளையும் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது மக்களுக்கு மத வழிபாட்டுக்கான உரிமையும் அவர்களுடைய பாரம்பரிய ஆலயங்களையும், வழிபாட்டிற்கு  விட்டுக்கொடுக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் கோரப்பட்டுள்ளது.