யுத்தம் இடம்பெற்ற போது இருந்ததை விடவும் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் நாடு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டை பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கு கிழக்கை இணைப்பதற்கான முன்னெடுப்புக்கள் நடந்தேறிவருகின்றன.
நாட்டின் யாப்பை மாற்ற வேண்டிய தேவையில்லை. யாப்பில் புதிய ஒன்றை சேர்க்க வேண்டுமாயின் புதிய சட்ட மூலமொன்றை சீர்திருத்தமாக முன்வைத்திருக்கலாம்.
இந்த நல்லாட்சி அரசு என்ன செய்து இருக்கின்றது. அவர்கள் நட்டை பிளவு படுத்தவே நினைக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மக்களின் ஆணையைக் கோருவதற்காக தேர்தலை நடாத்துவோம் என்றவர்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இது மக்களுக்கு இவர்கள் செய்யும் பெரிய அநியாயமாகும்.
கடந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் ஏற்படுத்திய மாற்றம் தற்பொழுது ஆபத்தான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.

