பிரபாகரனின் உருவம் பொறித்த துண்டுப் பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டுப் பெண் யாழில் வைத்து கைது

290 0

arrestயாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் இருந்து வந்த பெண் ஒருவர் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நாட்டில் இருந்து வந்து மருதனால் மடத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்னே குறித்த சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்ததும், தேசிய தினங்கள், தேசிய சின்னங்கள் போன்றவை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இது சம்மந்தமாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெரா ஒன்றில் உதவியுடன் குறித்த துண்டுபிரசுரங்களை ஒட்டியவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்தவர் என்றும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், விசாரணைகள் முடிவில் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.