எல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் மற்றும் கடற்றொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இப் போச்சுவாத்தையில் இணைத்துக் கொள்ளப்படாவிட்டால் முழு அளவில் கடற்றொழிலாளர்களை திரட்டி குறித்த பேச்சுவாத்தை நடைபெறும் தினங்களில் யாழ்ப்பாண்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம், வடமாகாண ஆளுநர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவோம் என்றும் சம்மேளனத்தினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இன்று செவ்வாக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த சம்மேளனத்தில் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வம் கருத்து வெளியிடும் போதே இவ் எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களும், வளச்சுரண்டல்கள் தொடர்பாக எமது சம்மேளனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இப்பிரச்சினைகளைகளுக்கான தீர்வு கானும் முகமாக மீண்டும் இரு நாட்டு பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்களிடையே எதிர்வரும் மாதம் 5 ஆம் திதகி பேச்சுவார்த்தையினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 128 சங்கங்களை அங்கத்துவமாகக் கொண்ட யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களில் சம்மேளனத்திற்கு நடைபெறவுள்ள பேச்சுவாத்த்தை தொடர்பான எந்த அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களிடம் எந்த தகவல்களையும் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடாத்தவும் இல்லை.
முதலில் கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கென உள்ள சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இல்லையேல் எமது பிரச்சினைகள் தொடர்பாக பேசி தீர்மானங்களை எடுத்துக் கொள்ளக்கூடிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இப் போச்சுவாத்தையில் உள்வாங்கப்பட வேண்டும் என்றார்.
- Home
- முக்கிய செய்திகள்
- எல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025