தனியாரிடமிருந்து மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு-ன்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு

260 0

தனியாரிடமிருந்து 71 மெகாவோலட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

என் பவர் நிறுவனத்தின் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 51 மெகாவோல்ட் மற்றும் மாத்தறை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

தனியாரிடமிருந்து மேலும் மின்சாரம் கொள்வளவு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. 

டெண்டர் ஊடாக மின் கொள்வனவு செய்வதற்கான தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.