கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலக தலைவன் கஞ்சிபானை இம்ரானின், மச்சினனின் மகனை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
தெமட்டகொடையைச் சேர்ந்த 50 வயதான பியல் புஷ்பகுமார மற்றும் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த கஞிபானை இம்ரானின் மச்சினனின் மகனான 22 வயதான மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய சி.ஐ.டி. அதிகாரிகளும் தேசிய உளவுத்துறையின் அதிகரைகளும் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், மொஹம்மட் அப்ரிடி மொஹம்மட் இன்ஹாம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.
எனினும் 50 வயதான பியல் புஷ்பகுமார விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 5.50 மணியளவில் டுபாயிலிருந்து வந்த யூ.எல்.226 எனும் விமானத்தில் இவர்கள் நாடுகடத்தப்ப்ட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அந்த இருவரையும் சி.ஐ.டி.யினர் பொறுப்பேற்று விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இதுவரை டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 31 பேரில் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..


