பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 02.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை நகரசபை மற்றும் தெஹிவளை கல்கிஸ்ஸ நகரசபையின் தீயணைப்பு பிரினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


