அம்பலாங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் இருவர் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று மாலை 05.45 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.
முதலில் வந்த ஒருவர் தங்க மாலைகளை கொள்வனவு செய்வது போல் பார்வையிட்டுள்ளதுடன், பின்னர் மற்றொருவர் முகத்தை மறைத்துக் கொண்டு துப்பாக்கியுடன் வந்து ஊழியர்களை அச்சுறுத்திவிட்டு தங்க மாலைகளை கொள்ளையடித்துக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
06 தங்க மாலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 04 இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


