போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை

268 0

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் போதைமாத்திரையை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்ரொரு சந்தேக நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

கொள்ளுப்பிட்டி பொலிசாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுக்கு அமைய விசேட சுற்றிவளைப்பொன்றினை முன்னெடுத்து சட்டத்தரணியொருவர் உள்ளடங்கலாக மூவரை பொலிசார் கைது செய்தனர்.

ஜஸ் போதைப்பொருளுடன் 38 வயதான புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும்  38 வயதுடைய சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடமிருந்து முறையே 430மில்லிகிராம் 4கிராம் 110மில்லிகிராம் ஜஸ்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது இந்நிலையிலேயே இவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களை இவ்வாறு தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணைகளில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

இதே வேளை இந்த சுற்றிவளைப்பின் போது 04 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட 33 வயதான நபரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். 

குறித்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.