எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு

9 0

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் துங்கிந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய  தந்னோருவ திஷானயகலாகே சேலி தம்மிகா திஷானாயக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு  தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த எட்டியாந்தோட்டை பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கரவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

கொட்டும் மழைக்கு மத்தியில் தொடரும் நில மீட்பு போராட்டம்!

Posted by - October 13, 2017 0
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள்  தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்து…

கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Posted by - July 16, 2018 0
கடும் மழையை தொடர்ந்து மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளது.நீரேந்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்யுமாயின் நீர் தேக்கத்தின் வான்…

இரு பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 4, 2017 0
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம்…

வலம்புரிச் சங்குடன் நால்வர் கைது

Posted by - August 2, 2018 0
1 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய வலம்புரிச் சங்குடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை தலைமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை மட்டிக்களி பிரதேசத்தில்…

வெள்ளம் பார்க்கவும், செல்பி எடுக்கவும் எவரும் வரவேண்டாம்- பொலிஸ்

Posted by - May 28, 2018 0
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிடவும், வீடியோ எடுக்கவும், “செல்பி” எடுக்கவும் வெளியிடங்களிலிருந்து வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேகர…