வத்தளை நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி விற்பனையில் பாரிய மோசடி- அஸாத் சாலி

8 0

வத்தளை நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி விற்பனையில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது. 

அதனால் விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமல் இருக்கும்பொருட்டு நகரசபை செயலாளரை தற்காலிகமாக இடமாற்றியுள்ளோம் என மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இ்டம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வத்தளை நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்த மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் குழுவொன்றை நியமித்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. அதனால் அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்ளும்வகையில் உடனடியாக வத்தளை நகரசபை செயலாளரை இடமாற்றியுள்ளோம்.

மேலும் இந்த காணி விற்பனையில் நகரசபையின் ஏனைய அதிகாரிகள் யாராவது தொடர்பு பட்டிருக்கின்றனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றோம். அவ்வாறு யாராவது தொடர்பு பட்டிருந்தால் அவர்களையும் இடமாற்ற நடவடிக்கை எடுப்போம். இல்லாவிட்டால் இந்த விசாரணைகளுக்கு அவர்களின் தலையீடுகள் ஏற்படும். 

அத்துடன் மேல்மாகாண அலுவலகம் எந்த கட்சிக்கும் சார்ப்பாக செயற்பட நான் ஆளுநராக இருக்கும்வரைக்கும் இடமளிக்கமாட்டேன். எந்த அழுத்தங்கள் வந்தாலும் நாங்கள் எமது தீர்மானங்களை செயற்படுத்துவோம். அதேபோன்று யார் மோசடி செய்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அஞ்சப்போவதுமில்லை என்றார்.

Related Post

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு

Posted by - September 20, 2017 0
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர். 20வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்ட மூலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள…

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்றும் விசாரணை

Posted by - December 7, 2018 0
பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற உள்ளது. இந்த…

ஹட்டனில் வாகன விபத்து பெண் ஒருவர் பலி

Posted by - January 24, 2017 0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…

வீதிஅபிவிருத்தி ஊழியர்கள் மீது மோதிய வேன் இருவர் பலி

Posted by - April 6, 2019 0
அநுராதப்புரத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் வீதி அபிவிருத்தி ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் வீதியின் 38 ஆவது தூனுக்கருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 12.40…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - February 14, 2019 0
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம்…