கோட்டாபய இல்லாவிட்டால் மேலும் ராஜபக்ஷர்கள் இருக்கின்றனர்-சந்திரசேன

18 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு களமிறங்க வாய்ப்ப கிடைக்காவிட்டால் அதற்காக களமிறங்க மேலும் ராஜபக்ஷர்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ மீதுள்ள பயத்தினால் பல்வேறு முறைகளை கையாண்டு அவரை களமிறங்கவிடாமல் செய்ய முயற்சிக்கின்றனர். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு வேட்பாளர் ஒருவரின் பெயரை தெரிவு செய்ய முடியாமல் இருப்பதாகவும் ஒவ்வொருவர் பலருடைய பெயரை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.